Sunday, September 23, 2012



துறைமுகத்துக்கு விடை கொடுத்துப் பிரிந்து போகும் கப்பலை மினுக்கு உடைக்காரர் பரபரப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். 
அருகிலிருந்த எளிய வயதானவர், “ஏன் இத்தனை பரபரப்பு? கப்பலில் ஏதேனும் அனுப்பியிருக்கிறீர்களா?” என்று வினவியதும்.., சற்று சுதாரித்துக்கொண்டவர் தன் தியாகச் செயலைப் பெருமையோடு... என் சொத்துகளில் பாதியை விற்று சோமாலியாவிற்கு பத்து கோடி மதிப்புள்ள பொருட்களை ஊழியத்திற்காக அனுப்புகிறேன்.. அதான
் இத்துணை ஆனந்தமாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

போராடு போராடி


தேவன் நம்மை முதலில் போராட,
பினனர் போரடிக்க அழைக்கிறார். 

போரடிக்கும் மாடு நல்ல தானியங்களை எஜமானின் களஞ்சியங்களில் கொண்டு சேற்குமாம்.. 

ஆகவே!
முதலில் நல்ல போராட்டத்தை போராடு..!
அதோடு கூட போரடி...! 

உண்மையுள்ளவனென்றெண்ணி!!!!!


இதுல காக்கிலோ கறி இருக்குது... பாஸ்டர் ஐயாவுக்கு மட்டும் தனியா செஞ்சுரு.. மத்தவகளுக்கு சாம்பாரும் அப்பளமும் கொடுத்துருலாம்..என்று சொல்லி கொண்டே சைக்கிளை சுவரில் சாய்த்து அடுப்படியிலிருந்த அமுதாவின் அருகில் உட்கார்ந்தான் குணசீலன்.


குணசீலன்.., எட்டு வருடமாக கடம்பூரிலிருக்கும் தீப்பெட்டி கம்பெனியில் போர்மேனாக வேலை செய்து வருகிறான். குச்சியில் மருந்து முக்கும் வேலை..அதனால் தான் என்னவோ இவனுக்கு ரேகைகளே இல்லாத விநோத உள்ளங்கைகள்.... உள்ளங்கைகளை போலவே களங்கமில்லா உள்ளம்.. அந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து இதுவரை ஒருமுறை கூட முதலாளியிடம் திட்டு வாங்காத ஒரே ஆள் இவன் தான். 


அமுதாவை கல்யாணம் பண்ணி மூணு வருஷம் ஆகியும் குழந்தை இல்லாததால்,

Testimony of Actress Mahalaxmi(Daughter of AVM Rajan)


1980-களில் ராணிதேனி, நன்றி முதலான பல தமிழ் திரைப்படங்களில் மகாலட்சுமி என்ற பெயரிலும், பின்பு கர்நாடக திரை உலகில் ஸ்ரீ என்ற பெயரிலும் நுழைந்து பிரபல நடிகையாக வாழ்ந்த முன்னாள் நடிகர் ஏ.வி.எம் ராஜன் அவர்களின் மகள் ரேச்சல் அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவருக்கு சாட்சியாக வாழும் அனுபவ சாட்சி. இந்த சாட்சிகளை உங்கள் ஜெபத்தில் நினைத்துக்கொள்ளுங்கள்.


Click here for audio

ஒலிப்பதிவில் சில :-
....
தேவன் மறுபடி என்னை சந்தித்தார்.... 
நாய் அடித்து கிடந்தது போல அன்று கிடந்தாயே , அன்று மரித்திருந்தால் நீ எங்கு சென்றிருப்பாய்?....
இலட்ச இலட்சமாய் சம்பாதிக்கிற இந்த தொழிலை எனக்காக விடுவாயா?...

உம் நாமதிற்காக இந்த தொழிலை நான் விடுகிறேன் என்றேன்... 


ஆவியின் கனி.... (Galatians 5:22-23)


Saturday, September 22, 2012

ஆபத்தான பயணம்...


வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது,
நெரிசலான சந்திப்பில்
தானியங்கி சிக்னல் வேலை செய்யவில்லை...
போக்குவரத்து காவலாளியும் இல்லை...

எத்திசையில் எவரும் எப்போதும் செல்லலாம் என்ற நிலை...

விளைவு,
ஒரு சில விபத்துக்கள்..
முடிவில் உயிர் சேதம்... 

ஷ வின் சிதறல்கள்


வரம் பெற்றவரா நிங்கள் ..?


சில பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும். சிலர் பிரசங்கிக்க ஆரம்பித்தால் "எப்ப முடிப்பார்?" எனத் தோன்றும்.


சில செய்திகள் நம் பாவங்களைச் சுட்டிக்காட்டி அறிவை உணர்த்தும். சில செய்திகள் அழகாய் ஞானத்தைப் போதிக்கும்.

சிலருடைய ஆணித்தரமான விசுவாசம் நம்மை புல்லரிக்கச் செய்யும். சிலருடைய விசுவாச வாழ்க்கையோ செல்லரித்துப் போய் கிடக்கும்.

சிலர் ஜெபிக்க ஆரம்பித்தால் அசுத்த ஆவிகள் அலறி ஓடும். சிலர் கைகளை வைத்து ஜெபிக்கிறேன் பேர்வழி என்று கீழே தள்ளி விட முயற்சிப்பதால் நாம் பதறி ஓட நேரிடும்.

கண் திறந்த பெண்...


அன்றொரு நாள்  காலை 6 மணிக்கே டியூட்டி டைம் தொடங்குவதால் காலமே எழுந்து வேகமாக வாகனத்தை செலுத்தி அலுவலகத்திற்குள் நுழைந்து கை கடிகாரத்தை பார்த்தபோது... சின்ன முள்ளும் பெரிய முள்ளும் முறைத்துக் கொண்டு எதிரெதிர்  திசையில் திரும்பி இருந்தது.... 



அப்பாடா..! நேரத்திற்கு வந்துவிட்டோம் என்று பெருமூச்சு விட்டு... வேலைகளை செய்ய தொடங்கினேன்... 

சற்று நேரம் சென்ற பிறகு பசி வயிற்றிலிருந்து ஓலமிட்டுக் கொண்டே இருக்க... சாப்பிடலாம் என்று வெளியில் வந்தால்... வாசலில் ஒரு செக்குயூரிட்டி பெண்மணி கையில் ஏதோ ஒன்றை வைத்து உற்று படித்துக் கொண்டிருப்பது என் கண்களில் பட்டது ... 

இரவு முழுவதும் விழித்து இருந்ததால் கண்கள் பூத்துப் போய் இருந்தது.... ஏன் இவ்வளவு சிரமப்பட்டு இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே அப்பெண்ணை நெருங்கிய போது தான் புரிந்தது

Monday, August 27, 2012

LIFE in all its Fullness


நம்பிக்கை பிறந்தது...

அன்று காலை வழக்கம் போல சபை ஆராதனை முடிந்து சகோதரர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு என் ஹெல்மேட்டையும், தோள் பையையும் இரு கரங்களில் பிடித்துக் கொண்டே சிதறி கிடக்கும் காலணிகளில் கண்கள் அலசிக்கொண்டிருக்க வாசலை அடைத்து இருந்த கூட்டம் என்னை தானாக வெளியே தள்ளிக் கொண்டிருந்தது. ஒரு காலணி கண்ணில் பட்டுவிட்டது, அதன் ஜோடியை தேடிக் கொண்டே வெளியேறும் போது ....

ராஜா! ஒரு நிமிஷம் சிலருக்கு ஜெபித்துவிட்டு நானும் உன் கூட வந்துறேன்... கொஞ்ச நேரம் அங்க உக்காருபா ... 

கிறிஸ்துவுக்குள் விதைக்கப்பட்டவர்கள்... (Bro J.V. Peter)


அன்பு நண்பர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

கடந்த ஞாயிற்று கிழமை(Aug 19,2012)  

மீண்டும் அடுத்த ஒரு மலரும் இங்கு உதிர்ந்துவிட்டது....
இங்கு உதிர்ந்தது அங்கு உதயமாகும் ... 
"எண்ணி எண்ணி துதி செய்வாய்... "

"
நீர் என் சொந்தம்.. நீர் என் பக்கம் ..."
என்ற பாடல்களின் சொந்தக்காரர்..

தேவனோடு தாம் கொண்டிருந்த உறவையும் அனுபவங்களையும் பாடல் வரிகளாக குழைத்து உணர்வூட்டும் பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடியவர்.

கிறிஸ்துவுக்குள் விதைக்கப்பட்டவர்கள்...(Bro. Immanuel Sunder)

கடந்த சனிகிழமை இரவு 8 மணி... அதிக களைப்போடும்பசியோடும் ஒரு ஹோட்டலுக்கு சென்று அமர்ந்து என் அலைபேசியை எடுத்து பார்த்த போது ஒரு மிஸ்டு-கால் என்று பளிச்சிட்டது.. யார் என்று கவனித்தால் அண்ணன்.ஜெயகுமார். அவர்களை அழைத்து பேசிய போதுநான் கேள்விப்பட்ட செய்தி அதிர்ச்சியென உள்ளத்தை தாக்கியது. ஹோட்டலிலேயே கண்ணீர் வர ஆரம்பித்தது.. தளர்ந்த குரலில் அவர் சொன்னது "ஷக்தி... அண்ணன் இம்மானுவேல் சுந்தர் இறந்துவிட்டார்கள்" இதை என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.. “ஏன் ஆண்டவரே? என்று  உள்ளம் திடுக்கிட்டு கேட்க ஆரம்பித்தது. ஒருவேளை நீங்கள் என்னை கிறிஸ்தவ விசுவாசத்தில் இன்னும் சரியாக வளராதவன் என்று நினைத்துக் கொள்ளலாம். இருந்தாலும் பரவா-இல்லை.. மீண்டும் மீண்டும் அதே கேள்வி தான் என் உள்ளதை நெருடிக் கொண்டிருந்தது

Saturday, February 25, 2012

இஸ்லாமிய சகோதரருக்கு கொடுத்த லிப்ட்

விலை ஏறப்பெற்ற திருஇரத்தமே
அவர் விலாவினின்று பாயுதே..
விலையேறப் பெற்றோனாய் என்னை...மாற்ற
விலையாக ஈந்தனரே....

என்று பாடிக் கொண்டே என் நீண்ட பயணத்தின் பாதி தூரத்தைக் கடந்துவிட்டேன். இன்னும் பாதி தொலைவு செல்ல வேண்டுமே என்ற சோர்வு சரீரத்தை தாக்கிக்கொண்டிருந்த போது ஐந்து நெடுஞ்சாலைகள் சந்திக்கும் ஒரு பாலத்தை நோக்கி என் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன். பாலத்தின் மைய பகுதியில் டீசண்டாக உடை உடுத்திய ஒருவர் ஒரு கையில் லாப்டாப்புடன்  தன்னை கடக்கும் எல்லா வாகனத்தின் முன்பும் மற்றொரு கையை அசைத்து லிப்ட் கேட்டுக் கொண்டிருந்தார். மின்னல் வேகத்தில் வாகனங்கள் பறந்து கொண்டிருக்க அவரை யாரும் கண்டுகொண்டது போல தெரியவில்லை. நான் அவரை கடந்த போது என்னை நோக்கி கைகளை அசைத்து ஒரு எதிர்ப்பார்ப்போடு சைகை காட்டினார்., எனினும் மனம் கேட்கவில்லை. வண்டியின் வேகத்தைக் குறைத்து ஓரமாக சற்று சிரமத்துடன் நிறுத்தினேன். நான் வாகனத்தின் வேகத்தைக் குறைக்க ஆரம்பிக்கும் போதே அவர் என்னை நோக்கி ஓடத் தொடங்கி இருக்க வேண்டும். ஏனென்றால், நான் வண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தால் அவர் என் அருகில் நிற்கிறார். 45 வயதுக்கு ஏற்ற தோற்றம். ரொம்ப தேங்க்ஸ்! ரொம்ப நேரம் இங்கேயே நின்றுகொண்டிருக்கிறேன். என் நண்பர் ஒருவர் இங்கே இறக்கிவிட்டார். பக்கத்துல எந்த பஸ் ஷ்டாப்பும் இல்ல. யாரும் லிப்டும் தரல. என்னை அருகில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டால் போதும்என்று சொல்லி வண்டியில் ஏறி உட்கார்ந்து பெருமூச்சு விட்டார். அவர் வேதனை புரிந்ததும், வண்டியை நிறுத்தியது குறித்து சந்தோஷப்பட்டுக் கொண்டேன். நீங்க எங்க போகணும், நான் போற வழியா இருந்தா உங்கள இறக்கி விடறேன்என்று சொன்னதும் அவர் கொஞ்சம் உற்சாகத்தோடு தான் செல்ல வேண்டிய இடத்தைச் சொன்னார். நானும் அந்த வழியா தான் போறேன், உங்கள அங்கேயே விட்றேன்என்று சொல்லி வெகு தூரம் தனியாக செல்லும் எனக்கு ஒரு கம்பனி கிடைத்துவிட்டது என்று உற்சாகமாக வாகனத்தை செலுத்தினேன்.என் உடல் சோர்வு வாகனத்தை நிறுத்த இடம் தரவில்லை

நீ கவர்திழுப்பவனானால்.....!


துறைமுகத்துக்கு விடை கொடுத்துப் பிரிந்து போகும் கப்பலை மினுக்கு உடை உடுத்தியவர் பரபரப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். அவரை நோக்கி வந்த மற்றொரு வயதானவர், “ஏன் இத்தனை பரபரப்பு? கப்பலில் ஏதேனும் அனுப்பியிருக்கிறீர்களா?” என்று வினவியதும் சற்று சுதாரித்துக்கொண்டு தான் செய்திருக்கும் தியாகச் செயலைப் பெருமையோடு என் எல்லா சொத்தையும் விற்று சோமாலியாவிற்கு பத்து கோடி மதிப்புள்ள பொருட்களை ஊழியத்திற்காக அனுப்பி வைத்திருக்கிறேன் என்றார். அதற்கு வயதானவர் நானும் ஒரு பொருளை அனுப்பியிருக்கிறேன் என்று சொல்லி அமைதியாய் கப்பலுக்கு விடை கொடுத்தார். அப்படி என்ன ஒரு பொருள் அனுப்பி இருக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு, பொறுமையுடன் பெரியவர் சொன்னார் என் ஒரே மகளை சோமாலியாவிற்கு ஊழியம் செய்ய அனுப்புகிறேன் என்றார். மினுக்கு உடைக்காரரின் தியாக உணர்வு, வயதானவரின் தியாகத்திற்கு முன் பனி மேல் பாய்ந்த உஷ்ணம் போல் கரைந்துவிட்டது.
ஆம்நாமும் கூட கிறிஸ்த்துவின் ஊழியத்திற்கு செய்யும் உதவிகளையும்கைமாறுகளையும் தியாகமாக எண்ணிவிடுவது உண்டு. நம்முடைய உதவிப் பொருளோ செல்வமோ கவர்ந்திழுக்கும் தியாகமாக இருக்குமா என்பது ஐயமே. ஆனால் உன்னத நோக்கத்திற்காக நம்மையே கொடுத்துவிடுவது அனைவரயையும் கவர்ந்திழுக்கும் தியாகமாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட கவர்ந்திழுக்கும் தியாகி தான் எப்பாப்பிரோதீத்து.

Saturday, February 4, 2012

சென்னை வாழ் நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன சூப்பர் கதை


நடிகர். ரஜினிகாந்த் அவர்களின் சிறப்பம்சம் அவர் நடிப்பும் ஸ்டைலும் மட்டும் அல்ல. அவர் பேசும் போது இடை இடையே சொல்லும் சிறு கதைகளும் சிறப்பு தான். அவரைப் பிடித்க்காதவர்கள் கூட அவர் சொல்லும் கதைகளை ரசிப்பது உண்டு. ஒன்று. இந்த கதைகள் சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்துவிடும். இதுபோல சமீபத்தில் ஒரு பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பேசும் போது சொன்ன கதை ஆச்சரியமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.
ஒரு இரவு வேளையில் இருவர் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்களாம். இருவரும் அருகில் உட்கார்ந்து இருந்தனர். அதில் ஒருவர் புத்தகம் ஒன்றை படித்து கொண்டிருக்க மற்றொருவர் அதை கவனித்துக் கொண்டிருந்தாராம். அவர்கள் இருவரின் உரையாடல் இதோ உங்களுக்காக ரஜினி சொன்ன பாணியில் .........

நபர் 1: ஐயா வணக்கம், இருவரும் வெகு தூரம் ஒன்றாக பயணம் செய்யப்போகிறோம் நாம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்வது நல்லது. நான் ஒரு விஞ்ஞானி, உங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாமா?

நபர் 2: (அமைதியான முகத்தோடு) சொல்லிக்கொள்ளும் அளவில் நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லைஎன்று சொல்லி கையில் உள்ள புத்தகத்தை தொடர்ந்து வாசிக்க தொடங்கினார். 

Friday, January 20, 2012

தேடல் ஒரு தொடர் கதை.


நாம் வாழும் பூமியில் மனித இனம் தன்னகத்தே கொண்டுள்ள ஓர் தனித்தன்ன்மைதேடல். தேடல் இல்லாத மனிதன் இல்லை.தேடல் இல்லையேல் அவன் மனிதனே இல்லை எனலாம். கற்கால மனிதன் முதல் இக்கால கணினி மனிதன் வரை எத்தனையோ மாற்றங்களை மனிதன் அடைந்திருந்தாலும் தேடலை அவன் விடவில்லை. ஒரு வித தேடலாலேயே மனிதன் நாகரீகம் அடைந்து இந்த நிலையில் வளர்ந்துள்ளான் என்பது மறுக்கமுடியதது. இப்படி தேடலின் பயனால் மனிதன் அடைந்த அறிவை தன் வல்லமையை அதிகரிக்க பயன்படுத்திக்கொண்டான். இதையே வேதமும், (நீதி 23:5) “ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.” ஆகவேதான் இன்றும் நம்மை சுற்றிலும் அனைவருமே அறிவைத் தேடி தத்தமது வல்லமையை அதிகரித்து கொள்ள முனைப்புடன் செயல்படுவதை காண முடிகிறது. இந்த முயற்சியின் மறைமுக வளர்ச்சியையே நாம் இன்று பல துறைகளிலும் காணலாம்விஞ்ஞானம் முதல் விளையாட்டு வரை. இந்த உலக வாழ்வில் ஒரு நிலையை எட்டியதும் ஓய்ந்து போகும் மனிதன் மன அமைதியை தேடி புனித யாத்திரை புறப்பட முற்படுவதும் உண்டு. எப்படியோதேடல் மாத்திரம் ஓயிந்து போவதில்லை.
இப்படி மனிதன் தன் வாழ்வில் எதையெல்லாமோ தேடினாலும் இறைவனையும் தன் தேடலின் வெற்றிக்காக தேடுகிறான். விந்தையான மனிதன் தான் இவன். இந்த தேடல் சுழற்ச்சியையும் மனிதனையும் பிரித்து விட முடியாது. கடவுளை அவர் இருக்கிற வண்ணமாகவே தேடாமல்தன் சுய தேவைகளை நிறைவேற்ற தேடுவதால் ஒரு நிலைக்கு மேல் இறைவனை தேடிக் கண்டடைய முடிவதில்லை.

Wednesday, January 18, 2012

Great Commission


The Great Commission is to make disciples who will continue to do what Jesus did. Mathew 28:19-20 paraphrases go teach disciples, in every people group, to do what Jesus commanded His first disciples to do.
19Therefore go and make disciples of all nations, baptizing them in the name of the Father and the Son and the Holy Spirit,20 teaching them to obey everything I have commanded you. And remember, I am with you always, to the end of the age.”
Many Christians have a wrong understanding of what the Great Commission of Jesus Christ is. The Great Commission of Jesus is not just to preach the Gospel to everyone, but to make disciples so the Gospel can be effectively preached to everyone. The Great Commission includes teaching disciples to do all the things Jesus taught His early disciples to do. That includes healing the sick and raising the dead!

A commission is
(1) An authorization to perform certain duties or tasks, or to take on certain powers,
(2) Authority to act in behalf of another,
(3) An entrusting, as of power, authority, etc., to a person or body.
Whom Is It Given To?

கலியாணத்துக்கு வாங்க ! விருந்து ரெடியா இருக்கு !


ரொம்ப காலத்துக்கு முன்னால ஒரு ராஜா இருந்தாராம். அந்த ராஜாவுக்கு எல்லா பவரும் இருந்ததாம். அவரு நல்லவரா வல்லவரா ஆண்டுகிட்டு வந்தாராம். அந்த ராஜாவுக்கு ஒரு மகன் இருந்தான், ராஜாவுக்கு அவரு புள்ள மேல கொள்ள பிரியம். ராஜாவோட மகனுக்கு யாரெல்லாம் மதிப்பு கொடுக்கிறான்களோ அவங்க மேல எல்லாம் ராஜாவும் அன்பா இருந்தாராம்.
ராஜா அவர் மகனுக்கு சரியான நேரத்தில கலியாணம் செய்து வைக்கணும்னு முடிவு செய்து , அவருக்கு ஏத்த அழகான, உண்மையுள்ள, கண்ணியமுள்ள ஒரு பொண்ண பாத்து நிச்சயம் பண்ணாரு. அப்படியே கலியாண நாளும் குறிச்சுட்டாரு. ராஜா கலியாணத்துக்கு தேவையான எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டே இருந்தாரு.
கலியாண நாள் நெருங்கிட்டதால, எல்லா வேலைக்காரங்களையும் வர சொல்லி கலியாணத்துக்கு சொந்தம், பந்தம், உறவினர்கள் என்று பத்திரிகை வச்சு எல்லாத்தையும் அழைச்சுட்டு வர சொன்னாரு. ஆனா அவங்க யாருமே அந்த அழைப்புக்கு மதிப்பு கொடுக்கல.
கலியாண நாளும் வந்துச்சு ,

சுற்றுலா போயிருக்கீங்களா ? – பாகம் ஒன்று


எனது மூன்றாம் வகுப்பு ஆசிரியை ஒரு நாள் வகுப்பில் என் தூக்கத்தைகெடுத்துப் போடும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு
அடுத்த மாதம் நம் பள்ளியில் பெங்களுரு சுற்றுலா செல்கிறோம், விருப்பம் உள்ளவர்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்று பெயர் கொடுக்கலாம்என்பதே. இந்த அறிவிப்பை கேட்டதுமே இருதயத்தில் ஒரே பதட்டம். எப்போடா வீட்டுக்கு போவோம், அப்பாவிடம் அனுமதி வாங்குவோம்என்று அந்த நாள் முழுவதும் ஒரே கவலை. ஆனாலும் ஒரு பெரிய அதிர்ச்சி அன்று மாலையே எனக்கு காத்திருந்தது. மாலை நான்கு மணி, இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டுக்கு செல்ல ஆவலாய் காத்திருந்தேன். என் வகுப்பு ஆசிரியை காலாண்டு பரீட்சை தாளோடு என் வகுப்புக்குள் நுழைந்தார். என் சுற்றுலா கவலை எல்லாம் போய் , தேர்வு முடிவுகள் பயம் தொற்றிக் கொண்டது. அந்த தேர்வு முடிவுகளில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நல்ல மதிப்பெண்கள் இல்லாவிட்டாலும் பாஸ் ஆகி விட்டேன் .

வீட்டுக்கு சென்றேன் ,