Monday, August 27, 2012

கிறிஸ்துவுக்குள் விதைக்கப்பட்டவர்கள்... (Bro J.V. Peter)


அன்பு நண்பர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

கடந்த ஞாயிற்று கிழமை(Aug 19,2012)  

மீண்டும் அடுத்த ஒரு மலரும் இங்கு உதிர்ந்துவிட்டது....
இங்கு உதிர்ந்தது அங்கு உதயமாகும் ... 
"எண்ணி எண்ணி துதி செய்வாய்... "

"
நீர் என் சொந்தம்.. நீர் என் பக்கம் ..."
என்ற பாடல்களின் சொந்தக்காரர்..

தேவனோடு தாம் கொண்டிருந்த உறவையும் அனுபவங்களையும் பாடல் வரிகளாக குழைத்து உணர்வூட்டும் பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடியவர்.
சகோ. J.V.Peter , 80 களில் இவரது பாடல்கள் கிறிஸ்தவ சுவிசேஷ பணிக்கு வலுவூட்டியதை யாராலும் மறுக்க இயலாது..
இன்றும் என்றும் இவரே "சுவிஷேச இசை-தென்றால்" என்று சொன்னால் அது மிகையாகாது..

பலரும் இவரது பாடல்களை கேட்ட , பாடி, தேவ பிரசன்னத்தை உணர்ந்திருப்பர். ஆனால் அந்த பாடல்களின் சொந்தக்காரர் இவர் தான் என அடையாளம் காணாமலிருக்க வாய்ப்புண்டு..

பல சந்தர்ப்பங்களில் எரிகிற அக்கினி சூளையை தாம் கடந்த அனுபங்களையே  பாடல் வரிகளாக மாற்றினார்..

இவரது மனைவி.சகோதரி. நிரமலா பீட்டர் மற்றும் பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள்.

August 24,2012 சகோ. J.V Peter அவர்களின் அடக்க ஆராதனையின் போது.. 
அவருடைய பிள்ளைகளும், அதன் பின் அவரது மனைவி சகோதரி. நிர்மலா பீட்டர் அவர்கள் பேசுவார்கள் என்று மேடையில் அறிவிக்கப்பட்டது.. 

அவரது பிள்ளைகள் கண்ணீரோடு தங்கள் தகப்பனாரை குறித்து பகிர்ந்து கொண்டு, கடினமான நேரத்தில் தங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.. 

அடுத்து அவரது மனைவி என்ன பேச போகிறார் என்ற ஆவால், கூடியிருந்த அனைவருக்குள்ளும்... 

மேடைக்கு வந்தவர்.. 

புண் முறுவலோடு மைக்கை கையில் வாங்கி ...
 
"God is Good and all the time God is Good...
என்று சொல்லி கீழ்க்கண்ட வசனங்களை வாசிக்க வேதத்தை திறந்தார்..
 

1 The 5 :16 
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
17 
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
18 
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது 

கடந்த 
35 ஆண்டுகள் எங்கள் வாழ்வை சந்தோஷமாய் ஏற்படுத்தித் தந்த தேவனுக்கு நன்றி சொல்கிறேன். 
நாங்கள் எப்போதும் 
, எல்லா காரியங்களையும் இணைந்தே செய்தோம்... 
அவர் விட்ட சென்ற பணிகளை நான் தொடர தேவன் கிருபை செய்வாராக..
 

தேவனுக்கு ஸ்தோத்திரம்.. "


என்று சொல்லி முடித்தார்கள்
 

கடின நேரத்திலும் நாம் தேவனை ஸ்தோத்தரிக்க கற்றிருப்போமானால் 
; அந்த விசுவாசம் தேவ பார்வையில் எத்துனை பெரியது
















No comments:

Post a Comment