விலை ஏறப்பெற்ற திருஇரத்தமே
அவர் விலாவினின்று பாயுதே..
விலையேறப் பெற்றோனாய் என்னை...மாற்ற
விலையாக ஈந்தனரே....
என்று பாடிக் கொண்டே என் நீண்ட பயணத்தின் பாதி தூரத்தைக் கடந்துவிட்டேன். இன்னும் பாதி தொலைவு செல்ல வேண்டுமே என்ற சோர்வு சரீரத்தை தாக்கிக்கொண்டிருந்த போது ஐந்து நெடுஞ்சாலைகள் சந்திக்கும் ஒரு பாலத்தை நோக்கி என் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன். பாலத்தின் மைய பகுதியில் டீசண்டாக உடை உடுத்திய ஒருவர் ஒரு கையில் லாப்டாப்புடன் தன்னை கடக்கும் எல்லா வாகனத்தின் முன்பும் மற்றொரு கையை அசைத்து லிப்ட் கேட்டுக் கொண்டிருந்தார். மின்னல் வேகத்தில் வாகனங்கள் பறந்து கொண்டிருக்க அவரை யாரும் கண்டுகொண்டது போல தெரியவில்லை. நான் அவரை கடந்த போது என்னை நோக்கி கைகளை அசைத்து ஒரு எதிர்ப்பார்ப்போடு சைகை காட்டினார்., எனினும் மனம் கேட்கவில்லை. வண்டியின் வேகத்தைக் குறைத்து ஓரமாக சற்று சிரமத்துடன் நிறுத்தினேன். நான் வாகனத்தின் வேகத்தைக் குறைக்க ஆரம்பிக்கும் போதே அவர் என்னை நோக்கி ஓடத் தொடங்கி இருக்க வேண்டும். ஏனென்றால், நான் வண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தால் அவர் என் அருகில் நிற்கிறார். 45 வயதுக்கு ஏற்ற தோற்றம். “ ரொம்ப தேங்க்ஸ்! ரொம்ப நேரம் இங்கேயே நின்றுகொண்டிருக்கிறேன். என் நண்பர் ஒருவர் இங்கே இறக்கிவிட்டார். பக்கத்துல எந்த பஸ் ஷ்டாப்பும் இல்ல. யாரும் லிப்டும் தரல. என்னை அருகில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டால் போதும்” என்று சொல்லி வண்டியில் ஏறி உட்கார்ந்து பெருமூச்சு விட்டார். அவர் வேதனை புரிந்ததும், வண்டியை நிறுத்தியது குறித்து சந்தோஷப்பட்டுக் கொண்டேன். “ நீங்க எங்க போகணும், நான் போற வழியா இருந்தா உங்கள இறக்கி விடறேன்” என்று சொன்னதும் அவர் கொஞ்சம் உற்சாகத்தோடு தான் செல்ல வேண்டிய இடத்தைச் சொன்னார். “நானும் அந்த வழியா தான் போறேன், உங்கள அங்கேயே விட்றேன்” என்று சொல்லி வெகு தூரம் தனியாக செல்லும் எனக்கு ஒரு கம்பனி கிடைத்துவிட்டது என்று உற்சாகமாக வாகனத்தை செலுத்தினேன்.என் உடல் சோர்வு வாகனத்தை நிறுத்த இடம் தரவில்லை


