Sunday, September 23, 2012



துறைமுகத்துக்கு விடை கொடுத்துப் பிரிந்து போகும் கப்பலை மினுக்கு உடைக்காரர் பரபரப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். 
அருகிலிருந்த எளிய வயதானவர், “ஏன் இத்தனை பரபரப்பு? கப்பலில் ஏதேனும் அனுப்பியிருக்கிறீர்களா?” என்று வினவியதும்.., சற்று சுதாரித்துக்கொண்டவர் தன் தியாகச் செயலைப் பெருமையோடு... என் சொத்துகளில் பாதியை விற்று சோமாலியாவிற்கு பத்து கோடி மதிப்புள்ள பொருட்களை ஊழியத்திற்காக அனுப்புகிறேன்.. அதான
் இத்துணை ஆனந்தமாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

என் வாழ்வில் இதுவே சிறந்த நாள், ஏனென்றால் எளிதில் எவரும் செய்யத் துணியாத தியாகச் செயலை செய்திருக்கிறேன் அல்லவா..என்று புன்னகைத்தார்.

அதற்கு வயதானவர் ஆம், நீங்கள் பெரிய காரியம் தான் செய்து இருக்கிறீர்கள்..நானோ ஒரே ஒரு பொருளை தான் சோமாலியா ஊழியங்களுக்கு அனுப்புகிறேன் என்று சொல்லி அமைதியானார்.
இருவரும் கப்பலுக்கு விடை கொடுத்தனர்.

மினுக்கு உடைக்காரர் தன் காரின் கதவை திறந்து கொண்டே அப்படி என்ன ஒரு பொருள்அனுப்பி இருக்கிறீர்கள்?” என்று வினவ.., முதியவர் பொறுமையுடன் சொன்னார் என் ஒரே மகளை சோமாலியாவிற்கு ஊழியம் செய்ய அனுப்புகிறேன்”.

பதில் ஏதும் சொல்லாமல், காருக்குள் புகுந்து கொண்டார். கார் நகர நகர அதனுள் இருந்த ஏ.சி அதிக பட்ச குளிர் நிலைக்குள் வந்திருந்தது. மினுக்கு உடைக்காரரின் தியாக உணர்வோ, வயதானவரின் தியாகத்திற்கு முன் பனி மேல் பாய்ந்த உஷ்ணம் போல் கரைந்து கொண்டிருந்தது 


No comments:

Post a Comment