Sunday, September 23, 2012



துறைமுகத்துக்கு விடை கொடுத்துப் பிரிந்து போகும் கப்பலை மினுக்கு உடைக்காரர் பரபரப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். 
அருகிலிருந்த எளிய வயதானவர், “ஏன் இத்தனை பரபரப்பு? கப்பலில் ஏதேனும் அனுப்பியிருக்கிறீர்களா?” என்று வினவியதும்.., சற்று சுதாரித்துக்கொண்டவர் தன் தியாகச் செயலைப் பெருமையோடு... என் சொத்துகளில் பாதியை விற்று சோமாலியாவிற்கு பத்து கோடி மதிப்புள்ள பொருட்களை ஊழியத்திற்காக அனுப்புகிறேன்.. அதான
் இத்துணை ஆனந்தமாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

போராடு போராடி


தேவன் நம்மை முதலில் போராட,
பினனர் போரடிக்க அழைக்கிறார். 

போரடிக்கும் மாடு நல்ல தானியங்களை எஜமானின் களஞ்சியங்களில் கொண்டு சேற்குமாம்.. 

ஆகவே!
முதலில் நல்ல போராட்டத்தை போராடு..!
அதோடு கூட போரடி...! 

உண்மையுள்ளவனென்றெண்ணி!!!!!


இதுல காக்கிலோ கறி இருக்குது... பாஸ்டர் ஐயாவுக்கு மட்டும் தனியா செஞ்சுரு.. மத்தவகளுக்கு சாம்பாரும் அப்பளமும் கொடுத்துருலாம்..என்று சொல்லி கொண்டே சைக்கிளை சுவரில் சாய்த்து அடுப்படியிலிருந்த அமுதாவின் அருகில் உட்கார்ந்தான் குணசீலன்.


குணசீலன்.., எட்டு வருடமாக கடம்பூரிலிருக்கும் தீப்பெட்டி கம்பெனியில் போர்மேனாக வேலை செய்து வருகிறான். குச்சியில் மருந்து முக்கும் வேலை..அதனால் தான் என்னவோ இவனுக்கு ரேகைகளே இல்லாத விநோத உள்ளங்கைகள்.... உள்ளங்கைகளை போலவே களங்கமில்லா உள்ளம்.. அந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து இதுவரை ஒருமுறை கூட முதலாளியிடம் திட்டு வாங்காத ஒரே ஆள் இவன் தான். 


அமுதாவை கல்யாணம் பண்ணி மூணு வருஷம் ஆகியும் குழந்தை இல்லாததால்,

Testimony of Actress Mahalaxmi(Daughter of AVM Rajan)


1980-களில் ராணிதேனி, நன்றி முதலான பல தமிழ் திரைப்படங்களில் மகாலட்சுமி என்ற பெயரிலும், பின்பு கர்நாடக திரை உலகில் ஸ்ரீ என்ற பெயரிலும் நுழைந்து பிரபல நடிகையாக வாழ்ந்த முன்னாள் நடிகர் ஏ.வி.எம் ராஜன் அவர்களின் மகள் ரேச்சல் அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவருக்கு சாட்சியாக வாழும் அனுபவ சாட்சி. இந்த சாட்சிகளை உங்கள் ஜெபத்தில் நினைத்துக்கொள்ளுங்கள்.


Click here for audio

ஒலிப்பதிவில் சில :-
....
தேவன் மறுபடி என்னை சந்தித்தார்.... 
நாய் அடித்து கிடந்தது போல அன்று கிடந்தாயே , அன்று மரித்திருந்தால் நீ எங்கு சென்றிருப்பாய்?....
இலட்ச இலட்சமாய் சம்பாதிக்கிற இந்த தொழிலை எனக்காக விடுவாயா?...

உம் நாமதிற்காக இந்த தொழிலை நான் விடுகிறேன் என்றேன்... 


ஆவியின் கனி.... (Galatians 5:22-23)


Saturday, September 22, 2012

ஆபத்தான பயணம்...


வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது,
நெரிசலான சந்திப்பில்
தானியங்கி சிக்னல் வேலை செய்யவில்லை...
போக்குவரத்து காவலாளியும் இல்லை...

எத்திசையில் எவரும் எப்போதும் செல்லலாம் என்ற நிலை...

விளைவு,
ஒரு சில விபத்துக்கள்..
முடிவில் உயிர் சேதம்... 

ஷ வின் சிதறல்கள்


வரம் பெற்றவரா நிங்கள் ..?


சில பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும். சிலர் பிரசங்கிக்க ஆரம்பித்தால் "எப்ப முடிப்பார்?" எனத் தோன்றும்.


சில செய்திகள் நம் பாவங்களைச் சுட்டிக்காட்டி அறிவை உணர்த்தும். சில செய்திகள் அழகாய் ஞானத்தைப் போதிக்கும்.

சிலருடைய ஆணித்தரமான விசுவாசம் நம்மை புல்லரிக்கச் செய்யும். சிலருடைய விசுவாச வாழ்க்கையோ செல்லரித்துப் போய் கிடக்கும்.

சிலர் ஜெபிக்க ஆரம்பித்தால் அசுத்த ஆவிகள் அலறி ஓடும். சிலர் கைகளை வைத்து ஜெபிக்கிறேன் பேர்வழி என்று கீழே தள்ளி விட முயற்சிப்பதால் நாம் பதறி ஓட நேரிடும்.

கண் திறந்த பெண்...


அன்றொரு நாள்  காலை 6 மணிக்கே டியூட்டி டைம் தொடங்குவதால் காலமே எழுந்து வேகமாக வாகனத்தை செலுத்தி அலுவலகத்திற்குள் நுழைந்து கை கடிகாரத்தை பார்த்தபோது... சின்ன முள்ளும் பெரிய முள்ளும் முறைத்துக் கொண்டு எதிரெதிர்  திசையில் திரும்பி இருந்தது.... 



அப்பாடா..! நேரத்திற்கு வந்துவிட்டோம் என்று பெருமூச்சு விட்டு... வேலைகளை செய்ய தொடங்கினேன்... 

சற்று நேரம் சென்ற பிறகு பசி வயிற்றிலிருந்து ஓலமிட்டுக் கொண்டே இருக்க... சாப்பிடலாம் என்று வெளியில் வந்தால்... வாசலில் ஒரு செக்குயூரிட்டி பெண்மணி கையில் ஏதோ ஒன்றை வைத்து உற்று படித்துக் கொண்டிருப்பது என் கண்களில் பட்டது ... 

இரவு முழுவதும் விழித்து இருந்ததால் கண்கள் பூத்துப் போய் இருந்தது.... ஏன் இவ்வளவு சிரமப்பட்டு இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே அப்பெண்ணை நெருங்கிய போது தான் புரிந்தது