Monday, August 27, 2012

LIFE in all its Fullness


நம்பிக்கை பிறந்தது...

அன்று காலை வழக்கம் போல சபை ஆராதனை முடிந்து சகோதரர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு என் ஹெல்மேட்டையும், தோள் பையையும் இரு கரங்களில் பிடித்துக் கொண்டே சிதறி கிடக்கும் காலணிகளில் கண்கள் அலசிக்கொண்டிருக்க வாசலை அடைத்து இருந்த கூட்டம் என்னை தானாக வெளியே தள்ளிக் கொண்டிருந்தது. ஒரு காலணி கண்ணில் பட்டுவிட்டது, அதன் ஜோடியை தேடிக் கொண்டே வெளியேறும் போது ....

ராஜா! ஒரு நிமிஷம் சிலருக்கு ஜெபித்துவிட்டு நானும் உன் கூட வந்துறேன்... கொஞ்ச நேரம் அங்க உக்காருபா ... 

கிறிஸ்துவுக்குள் விதைக்கப்பட்டவர்கள்... (Bro J.V. Peter)


அன்பு நண்பர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

கடந்த ஞாயிற்று கிழமை(Aug 19,2012)  

மீண்டும் அடுத்த ஒரு மலரும் இங்கு உதிர்ந்துவிட்டது....
இங்கு உதிர்ந்தது அங்கு உதயமாகும் ... 
"எண்ணி எண்ணி துதி செய்வாய்... "

"
நீர் என் சொந்தம்.. நீர் என் பக்கம் ..."
என்ற பாடல்களின் சொந்தக்காரர்..

தேவனோடு தாம் கொண்டிருந்த உறவையும் அனுபவங்களையும் பாடல் வரிகளாக குழைத்து உணர்வூட்டும் பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடியவர்.

கிறிஸ்துவுக்குள் விதைக்கப்பட்டவர்கள்...(Bro. Immanuel Sunder)

கடந்த சனிகிழமை இரவு 8 மணி... அதிக களைப்போடும்பசியோடும் ஒரு ஹோட்டலுக்கு சென்று அமர்ந்து என் அலைபேசியை எடுத்து பார்த்த போது ஒரு மிஸ்டு-கால் என்று பளிச்சிட்டது.. யார் என்று கவனித்தால் அண்ணன்.ஜெயகுமார். அவர்களை அழைத்து பேசிய போதுநான் கேள்விப்பட்ட செய்தி அதிர்ச்சியென உள்ளத்தை தாக்கியது. ஹோட்டலிலேயே கண்ணீர் வர ஆரம்பித்தது.. தளர்ந்த குரலில் அவர் சொன்னது "ஷக்தி... அண்ணன் இம்மானுவேல் சுந்தர் இறந்துவிட்டார்கள்" இதை என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.. “ஏன் ஆண்டவரே? என்று  உள்ளம் திடுக்கிட்டு கேட்க ஆரம்பித்தது. ஒருவேளை நீங்கள் என்னை கிறிஸ்தவ விசுவாசத்தில் இன்னும் சரியாக வளராதவன் என்று நினைத்துக் கொள்ளலாம். இருந்தாலும் பரவா-இல்லை.. மீண்டும் மீண்டும் அதே கேள்வி தான் என் உள்ளதை நெருடிக் கொண்டிருந்தது