
ரொம்ப காலத்துக்கு முன்னால ஒரு ராஜா இருந்தாராம். அந்த ராஜாவுக்கு எல்லா பவரும் இருந்ததாம். அவரு நல்லவரா வல்லவரா ஆண்டுகிட்டு வந்தாராம். அந்த ராஜாவுக்கு ஒரு மகன் இருந்தான், ராஜாவுக்கு அவரு புள்ள மேல கொள்ள பிரியம். ராஜாவோட மகனுக்கு யாரெல்லாம் மதிப்பு கொடுக்கிறான்களோ அவங்க மேல எல்லாம் ராஜாவும் அன்பா இருந்தாராம்.
ராஜா அவர் மகனுக்கு சரியான நேரத்தில கலியாணம் செய்து வைக்கணும்னு முடிவு செய்து , அவருக்கு ஏத்த அழகான, உண்மையுள்ள, கண்ணியமுள்ள ஒரு பொண்ண பாத்து நிச்சயம் பண்ணாரு. அப்படியே கலியாண நாளும் குறிச்சுட்டாரு. ராஜா கலியாணத்துக்கு தேவையான எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டே இருந்தாரு.
கலியாண நாள் நெருங்கிட்டதால, எல்லா வேலைக்காரங்களையும் வர சொல்லி கலியாணத்துக்கு சொந்தம், பந்தம், உறவினர்கள் என்று பத்திரிகை வச்சு எல்லாத்தையும் அழைச்சுட்டு வர சொன்னாரு. ஆனா அவங்க யாருமே அந்த அழைப்புக்கு மதிப்பு கொடுக்கல.
கலியாண நாளும் வந்துச்சு ,
ராஜா பிரமாதமான ஒரு விருந்தும், விருந்தினருக்கு புது ஆடையும் ரெடி பண்ணிட்டு பத்திரிக்கை வச்ச எல்லாருக்காகவும் காத்துட்டு இருந்தார். காலைல பத்து மணி ஆகியும் யாருமே வரததால இன்னும் அதிகமான வேற வேலைக்கரங்கள அனுப்பி “கலியாணத்துக்கு வாங்க, விருந்து ரெடியா இருக்கு” னு சொல்ல சொன்னாரு.
ஆனா கலியாணத்துக்கு அழைக்கப்பட்டவங்க வேலைக்கு போகணும், வியாபாரம் இருக்கு, மாடு கன்னு போட்டுருக்கு, சினிமாவுக்கு போகணும் சூப்பர் ஸ்டார் படம் வந்திருக்குனு ஏதோ ஒரு காரணத்த சொல்லி ராஜாவோட கலியாண விருந்துக்கு வர முடியாது சொல்லிட்டாங்க. இன்னும் கொஞ்சம் பேர் அழைக்க வந்த வேலைக்கரங்கள அடிச்சு உதைச்சு அனுபிட்டாங்க. இத கேள்விப்பட்ட ராஜா மிகவும் கோவப்பட்டு அவங்கள அழிக்க சொல்லி உத்தரவு போட்டாரு. ராஜாவோட பொருமைக்கே இவங்க சோதனைய கொண்டு வந்துட்டாங்க.
ராஜா மறுபடியும் வேலைக்காரங்கள கூப்பிட்டு விருந்து ஆயத்தமா இருக்குது, நீங்க எல்லாரும் போய் தெருக்கள்ல இருக்கிற நல்லவங்க, கெட்டவங்க யார பாத்தாலும் கூட்டிட்டு வாங்கனு சொன்னாரு. கொஞ்ச நேரத்திலேயே கலியாண மண்டபம் நிறையா ஆள்கள் வந்துட்டாங்க.விருந்துக்கு வந்த எல்லாருக்கும் வாசலிலேயே புது உடை கொடுத்து விருந்து நடக்கிற இடத்துக்கு அனுப்புனாங்க. விருந்துக்கு வந்த எல்லாத்தையும் ராஜா பார்க்க வந்தாரு , அங்க ஒருத்தன் கலியாண உடை இல்லாமல் இருக்கறத பாத்து, “சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டார்” அவன் எதுவுமே பேசல. “இவனை விருந்து நடக்கிற இடத்துக்கு வெளியே அனுப்புங்கள்” என்று ராஜா கட்டளையிட்டார்.
இப்படியாக ராஜா மகனோட கலியாணம் நடந்தது. ராஜாவோட மகன் சொன்னார் “அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்”
நண்பனே ! தேவன் ஒரு பெரிய விருந்தை ஆயத்தம் செய்த பின் இந்த பூமிக்கு வர போகிறார். உன்னை யாரவது இந்த விருந்துக்கு இதற்க்கு முன்னால் அழைத்து இருக்கிறார்களா? இல்லை! என்பவருக்கு இந்த செய்தியே அழைப்பு, ஆம்! என்பவருக்கு இது அழைப்பை நினைப்பூட்டும் ஒரு REMINDER.
கலியாண விருந்துக்கு நீங்கள் எப்படி செல்வீர்கள். ஆயத்ததுடன், சுத்தமாக, வாசனை திரவியம் பூசி, மினுக்கான உடை உடுத்தி தானே. வானத்தையும், பூமியையும் உண்டாகின தேவனுடைய விருந்துக்கு அழைக்கப்பட்ட நீங்கள் ஆயத்தமாகுங்கள். “எப்படி ஆயத்தமாவது?” என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் கேட்கிறது.
- விசுவாசியுங்கள். உங்களுடைய பாவங்களுக்காக தேவனுடைய குமாரனாகிய இயேசு சிலுவையில் மரித்தார், பின்பு மரணத்தை ஜெயித்து உயிர்த்தார் என்று விசுவாசியுங்கள்.
- சுத்தமாகுங்கள். சுத்தம் என்பது உள்ளத்தின் தூய்மை. பாவ செயல்களில் இருந்து மனம் திரும்புகள்.
- தேவனோடு உடன்படிக்கை செய்யுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞான ஸ்நானம் பெற்றுகொள்ளுங்கள்.
- தேவ சித்தம் செய்யுங்கள். பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு தேவ சித்ததில் நடவுங்கள். வேதம் உங்கள் பாதைக்கு தீபம் ஆகட்டும் .
- இயேசுவின் இரண்டாம் வருகைக்காக காத்திருப்பதோடு, உங்கள் நண்பர்களையும் விருந்துக்கு அழையுங்கள்.
ராஜா வருகிறார் ஆயத்தமாவோம்....
இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்லுவோம் ......
ராஜா விருந்தில , மகிமையின் வஸ்திரம் உடுத்தி; பரிசுத்தர் கூட்டம் நடுவில் உங்களைக் காண விரும்பி ,
இந்த கலியாண விருந்தின் அழைப்பிதழை அன்போடு உங்களுக்கு கொண்டு வந்திருக்கும் வேலைக்காரன் .
குறிப்பு : மத்தேயு 22 : 2 – 14
GOOD ONE
ReplyDelete