நாம் வாழும் பூமியில் மனித இனம் தன்னகத்தே கொண்டுள்ள ஓர்
தனித்தன்ன்மை, தேடல். தேடல் இல்லாத மனிதன்
இல்லை.தேடல் இல்லையேல் அவன் மனிதனே இல்லை எனலாம். கற்கால மனிதன் முதல் இக்கால
கணினி மனிதன் வரை எத்தனையோ மாற்றங்களை மனிதன் அடைந்திருந்தாலும் தேடலை அவன்
விடவில்லை. ஒரு வித தேடலாலேயே மனிதன் நாகரீகம் அடைந்து இந்த நிலையில்
வளர்ந்துள்ளான் என்பது மறுக்கமுடியதது. இப்படி தேடலின் பயனால் மனிதன் அடைந்த அறிவை
தன் வல்லமையை அதிகரிக்க பயன்படுத்திக்கொண்டான். இதையே வேதமும், (நீதி 23:5) “ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை
அதிகரிக்கப்பண்ணுகிறான்.” ஆகவேதான் இன்றும் நம்மை
சுற்றிலும் அனைவருமே அறிவைத் தேடி தத்தமது வல்லமையை அதிகரித்து கொள்ள முனைப்புடன்
செயல்படுவதை காண முடிகிறது. இந்த முயற்சியின் மறைமுக வளர்ச்சியையே நாம் இன்று பல
துறைகளிலும் காணலாம், விஞ்ஞானம் முதல் விளையாட்டு
வரை. இந்த உலக வாழ்வில் ஒரு நிலையை எட்டியதும் ஓய்ந்து போகும் மனிதன் மன அமைதியை
தேடி புனித யாத்திரை புறப்பட முற்படுவதும் உண்டு. எப்படியோ, தேடல் மாத்திரம் ஓயிந்து
போவதில்லை.
இப்படி மனிதன் தன் வாழ்வில் எதையெல்லாமோ தேடினாலும்
இறைவனையும் தன் தேடலின் வெற்றிக்காக தேடுகிறான். விந்தையான மனிதன் தான் இவன். இந்த
தேடல் சுழற்ச்சியையும் மனிதனையும் பிரித்து விட முடியாது. கடவுளை அவர் இருக்கிற
வண்ணமாகவே தேடாமல், தன் சுய தேவைகளை நிறைவேற்ற
தேடுவதால் ஒரு நிலைக்கு மேல் இறைவனை தேடிக் கண்டடைய முடிவதில்லை.



