நாம் வாழும் பூமியில் மனித இனம் தன்னகத்தே கொண்டுள்ள ஓர்
தனித்தன்ன்மை, தேடல். தேடல் இல்லாத மனிதன்
இல்லை.தேடல் இல்லையேல் அவன் மனிதனே இல்லை எனலாம். கற்கால மனிதன் முதல் இக்கால
கணினி மனிதன் வரை எத்தனையோ மாற்றங்களை மனிதன் அடைந்திருந்தாலும் தேடலை அவன்
விடவில்லை. ஒரு வித தேடலாலேயே மனிதன் நாகரீகம் அடைந்து இந்த நிலையில்
வளர்ந்துள்ளான் என்பது மறுக்கமுடியதது. இப்படி தேடலின் பயனால் மனிதன் அடைந்த அறிவை
தன் வல்லமையை அதிகரிக்க பயன்படுத்திக்கொண்டான். இதையே வேதமும், (நீதி 23:5) “ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை
அதிகரிக்கப்பண்ணுகிறான்.” ஆகவேதான் இன்றும் நம்மை
சுற்றிலும் அனைவருமே அறிவைத் தேடி தத்தமது வல்லமையை அதிகரித்து கொள்ள முனைப்புடன்
செயல்படுவதை காண முடிகிறது. இந்த முயற்சியின் மறைமுக வளர்ச்சியையே நாம் இன்று பல
துறைகளிலும் காணலாம், விஞ்ஞானம் முதல் விளையாட்டு
வரை. இந்த உலக வாழ்வில் ஒரு நிலையை எட்டியதும் ஓய்ந்து போகும் மனிதன் மன அமைதியை
தேடி புனித யாத்திரை புறப்பட முற்படுவதும் உண்டு. எப்படியோ, தேடல் மாத்திரம் ஓயிந்து
போவதில்லை.
இப்படி மனிதன் தன் வாழ்வில் எதையெல்லாமோ தேடினாலும்
இறைவனையும் தன் தேடலின் வெற்றிக்காக தேடுகிறான். விந்தையான மனிதன் தான் இவன். இந்த
தேடல் சுழற்ச்சியையும் மனிதனையும் பிரித்து விட முடியாது. கடவுளை அவர் இருக்கிற
வண்ணமாகவே தேடாமல், தன் சுய தேவைகளை நிறைவேற்ற
தேடுவதால் ஒரு நிலைக்கு மேல் இறைவனை தேடிக் கண்டடைய முடிவதில்லை.
மனிதன் விந்தையானவனாய் இருந்தாலும் அவனை படைத்தவரும் சற்று
வித்தியாசமானவர் தான், ஒருபுறம் மனிதன் தெய்வத்தைத்
தேடிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் தெய்வம்
மனிதனை தேடுகிறார். “என்ன! தெய்வம் மனிதனை
தேடுகிறாரா?” என்று குழப்பம் அடைய
வேண்டாம். உண்மை தான் இந்த உலகம் உண்டானது முதலே அவர் மனிதனை தேடுகிறார். காணாத
ஒன்றையே தேட வேண்டும். நாம் அறிந்தது போல இறைவனுக்கு மறைவானது ஒன்றும் இல்லாத
போதும் அவர் மனிதனை தேடுகிறார் என்பது ஆச்சரியமான சத்தியம். வேத புத்தகத்தில்
யோபுவின் புத்தகம் தான் முதலில் எழுதப்பட்டது. தேவன் வேதத்தின் முதல் வரிகளை
எப்படி எழுதி இருக்க வேண்டும் , தன்னுடைய மகத்துவத்தையும், பராகிரமத்தையும் தானே. ஆனால்
வேதத்தின் முதல் வரிகள் இப்படி தொடங்குகிறது “1ஊத்ஸ் தேசத்திலே யோபு
என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்” . தேவன் ஒரு மனுஷனுக்கு
கொடுக்கும் முக்கியத்துவம் மிக பெரியது. அதனால் தான் இயேசு சொன்னார் “ ஒரு பாவி இரட்சிக்கபடும்
போது பரலோகமே சந்தோஷம் கொள்கிறது “
இறைவன் ஏன் மனிதனைத் தேட வேண்டும்? தேவன் மனிதனை தம்முடைய
சாயலில் படைத்தார்.(ஆதி 1:27) தம்முடைய சாயலில் உண்டாக்கப்பட்ட
மனிதனுக்கு மகிமையையும் , கனத்தயையும் கொடுத்து
இருந்தார்.(சங்கீ 8:5,
1 கொரி 11:7). தேவ சாயலில் உண்டாக்கப்பட்ட
மனிதனுக்கு தேவனோடு இயற்கையாகவே ஒரு உன்னத இணைப்பு உண்டாகி இருந்தது. தேவனுக்கு
மனிதனும், மனிதனுக்கு தேவனும்
மறைவானவர்கள் அல்ல என்னும் ஒரு சூழல் இருந்தது. தேவன் ஆதி மனிதனோடு உறவாடி
வந்தார். ஆதி மனிதனாகிய ஆதாம் வசித்த ஏதேன் தோட்டத்திற்கு தேவனே மனிதனை தேடி
வந்தார்.(ஆதி 3:8) இந்த உறவின் மகத்துவத்தை
உணராத மனிதன் தேவ கட்டளையை மீறிய போது பாவமாகிய இருளில் தானாகவே விழுந்து
போனான்.(கொலோ 1:13) வெளிச்சத்திற்குள் இருளுக்கு
அனுமதி இல்லை. ஆகவே வெளிச்சமாகிய தேவனிடத்தில் இருந்து பாவமாகிய இருள் மனிதனை
பிரித்து விட்டது. இதை உணராத மனிதன் தன் சுய இச்சைகளுக்கும் விருப்பங்களுக்கும்
அடிமையாகி பாவத்தில் உழல ஆரம்பித்துவிட்டான்.(ஆதி 6:5) மனிதன் தன்னை பிசாசுக்கு
அடிமை ஆக்கிக்கொண்டான். (எபேசி 2:2) தேவ மகிமையை இழந்து போனான். (ரோமர் 3:23)
பாவத்தில் வாழ்ந்த மனித இனம் ஒரு கட்டத்தில் அழிவை/மரணத்தை
சந்திக்க வேண்டியதாயிற்று.(ஆதி 2:17, ரோமர் 5:12) தான் படைத்த மனித இனத்தை
தேவன் அழிவுக்கு ஒப்புக்கொடுக்க விரும்பவில்லை. ஆகவே அவர் அங்கலாய்த்தார் ,மனஸ்தாபப்பட்டார், இறுதியாக தேடினார். மனித
இனத்தை அழிவில் இருந்து காப்பாற்ற ஒரு மனிதனை தேடினார். அதற்கு தகுதியான ஒரு
மனிதன் மற்றவர்களை போல இருக்க கூடாது. அந்த தேடலின் முடிவு நோவா. நோவா தேவனுக்கு
கீழ்ப்படிகிறவனாய் தேவனுடைய இருதயத்தின் ஏக்கத்தை நிறைவேற்றினான்.(2 பேது 2:5). உலகம் முழுவதும் உள்ள எல்லா
இனங்களும் அழிந்து போனாலும் நோவாவோடு இணைந்து கொண்ட ஒருவரையும் அழிவு நெருங்க
முடியவில்லை.
பாவம் மனித இனத்தில் ஒரு குடுமபத்தை தவிர அனைவரையும்
அழித்தது. தேவ கிருபை நோவாவை காப்பாற்றியது. பாவம் அதோடு ஒழிந்துவிட்டதா? இல்லை , நோவாவின் நாட்களிலேயே மனிதனை
தொடர்ந்தது. இப்போது மனிதன் ஒரு பெரிய கூட்டமாக பெருகி தேவனுக்கு எதிரான தன்
சாம்ராஜ்யத்தை உண்டாக்கி தனக்கு ஒரு பேர் உண்டாக சுய மகிமையை தேடினான். இதனால்
சிதறுண்ட மனிதன் பல பாஷை உள்ளவனாகவும், பல இனமாகவும் சிதறடிக்க்பட்டான்.(ஆதி 11) இதையே வேதமும் நாம்
சிதறடிக்கப்பட்ட ஆடுகளாய் இருந்தோம் என்று உறுதிபடுத்துகிறது.(மத்தே 9:26). பல தேசமாக சிதறிய மனிதனில்
தேவன் தனக்கென்று ஒரு மனிதனை தேடினார். அப்போது ஆபிரகாமை தேர்ந்தெடுத்து தம்மை
பணிந்து கொண்டு அன்பு கூற ஒரு தேசத்தை தேர்ந்தெடுத்தார். (எபி 11:8-10)
காலங்கள் உருண்டோட தேர்ந்தெடுத்த ஜனம் தேவனின் ஆளுகையை
தள்ளி தன்னை தானே ஆண்டுகொள்ள தீர்மானித்தது. வானத்தையும் பூமியையும் படைத்த ராஜாவை
தள்ளி மண்ணில் இருந்து உண்டான ஒரு மனிதனை ராஜாவாக தேர்ந்தெடுத்தான்.(1 சாமு 8:7) மனிதன் தேவ ஆளுகையை தள்ளியதால்
பாவத்திற்கு முழுவதும் தன்னை விற்றுப் போட்டான்.பாவத்தின் சம்பளம் மரணம் என்று
அறிந்த தேவன் மனிதனை அழிவில் இருந்து காப்பாற்ற தன் எச்சரிப்பை அறிவிக்கும் மனிதனை
தேடினார். இப்படியே இந்த தேடல் ஒன்று தொடங்கி மற்றொன்றாக தொடர்ந்து கொண்டே
இருந்தது. மனிதன் ஆதியிலே பாவத்தில் விழுந்து போனதால் தேவ விருப்பங்களை முழுமையாக
நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடைந்தவனாகவே இருக்கிறான். ஆகவே தேவனின் தேடல் ஒரு
தொடர்கதையாக தொடர்ந்தது.
குருடனுக்கு குருடன் வழி காட்ட முடியுமா? அது போலவே இருளில் இருக்கும் ஒரு மனிதன்
இருளில் இருக்கும் மற்றவர்களை எப்படி விடுவிக்க முடியும்? (மத்தே 15:14) ஆனால் தேவனோ
மனிதனைவெளிச்சதினண்டைக்கு கொண்டு வர முனைப்போடு செயல்பட்டு வருகிறார். எல்லாருமே
குருடராய் இருக்க தேவன் தேடும் அந்த மனிதன் இந்த உலகில் இல்லை.(எசெக் 22:30) மனிதனுடைய அறிவுப் புரட்சி
அவனை தேவனை சார்ந்தவனாக ஆக்காமல் சுயத்தை சார்ந்தவனாக மாற்றி விட்டது.
இந்த சூழலில் தேவனே மனிதனை அழிவில் இருந்து மீட்க தாமே
மனிதனாக வந்தார். இதனால் அவர் ஆதி முதலே மனிதன் மீது கொண்டுள்ள அன்பு
வெளிப்பட்டது.(ரோமர்-5:8).இருளில் இருப்போருக்கு
வெளிச்சமாக, சிறுமைபட்டோருக்கு
அடைக்கலமாக இயேசு என்ற மனிதனாக மனித இனத்தை காக்க தேவன் வெளிப்பட்டார்.(ஏசா 60:1) அவர் இழந்து போனதை தேடவும்
இரட்சிக்கவும் வந்தார்.(லூக் 19:10). அவரிடத்தில் பாவம் இல்லை.(2 கொரி 5:21) அவரே ஒளியாய் இருந்தார்.
சிதறுண்ட ஆடுகளை தம் மந்தையில் சேர்த்தார்.
மனிதன் அடைய வேண்டிய அழிவை இயேசுவே ஏற்றுக் கொண்டார். அவர்
பாவம் செய்யாத போதும் நம்முடைய பாவங்களை ஏற்று நம் நோய்களை சுமந்தார். ஆதி முதலே
உண்டான பாவத்தின் சாபத்தை தான் ஏற்றுக் கொண்டு நமக்கு விடுதலை தந்தார். (எபி 2:14-16)
நோவா வின் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும் அழிந்து
ஒரு மனுஷன் காப்பாற்றப்பட்டான்.
ஆனால் இயேசுவோ எல்லா மனிதர்களையும் காப்பாற்ற தன்னை
அழித்துக் கொண்டார்.
அவர் மூன்றாம் நாள் உயிர் தெழுந்து பிதாவின் வலது
பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.(எபிரேயர் 7:25).இன்றும் கூட தம் சிலுவை
மரணத்தின் வழியே அவருக்குள் பிரவேசிக்கும் மனிதனை அவர் பாச கரம் நீட்டி தேடிக்
கொண்டிருக்கிறார்,
உன்னையும் அவர் அவ்வாறே தேடி வந்தார். இந்த அன்பை உணர்ந்த
நீ மந்தையில் இருந்து சிதறி போன ஆடுகளை தேட வேண்டாமா? காணாமல் போன குமாரன் வீடு
வந்து சேர ஒரு தகப்பன் வழி மேல் விழி வைத்து காத்திருப்பது உனக்குத் தெரியாதா?

இன்று மாலை வீடுதிரும்பிக்கொண்டிருந்தபோது மனதிற்குள் கவிதை போன்ற சில வரிகள் வந்துபோனது.அந்த வரிகளையொட்டி இந்த கட்டுரை அமைந்திருப்பது ஆச்சரியம்.வாழ்த்துக்கள்,நண்பரே..!
ReplyDeleteகவிதை..(???)
தேடு..தேடு...தேடிக்கொண்டேயிரு
கிடைக்கும்வரை தேடு
எதைத் தேடுகிறாய் என்று ஒருவர் கேட்கிறார்
மனிதனே நீ எதைத் தேடுகிறாய் ? எது உன் தேவை ?
உன் தேவைக்கானதை தேடுகிறாயோ?
உன் தேவை என்னவென்று தேடுகிறாயோ?
அது உன் அருகில் இருக்க தேடலாமோ?
உன்னில் தொலைத்த உன்னைத் தேடுகிறாயோ?
உன்னைத் தேடும் என்னைத் தேடுகிறாயோ?
வழியில் தொலைத்தாயோ,
பழியில் துடித்தாயோ,
குழியில் தவித்தாயோ..?
தேடித் தேடி கிடைக்கும் வரை தேடி
கிடைத்ததையே நாடி அதை நோக்கி ஓடி
துவண்டிருந்த நாட்கள் போதும்
தேடலை நிறுத்திவிட்டு
உன்னைத் தேடிவந்த என்னை நோக்கிவிடு
உன் தேடலை என்னிடம் விடு
நீ எதைத் தேடுகிறாயோ
அதை உன்னிடமிருந்தே எடுத்து நான் தருவேன்
நீ தேடியது நானாக இருந்தால்
உன்னைத் தேடியது நானாக இருப்பேன்.
உன் தேடல் என்னில் முடிந்து என்னில் துவங்கட்டும்
உன்னைப் போன்ற இன்னொருவனைத் தேடு..!
அன்பு கவிஞருக்கு நன்றி, தங்கள் கவிதை சிந்திக்க தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது.தங்களுக்கு சமதம் என்றால் இந்த கவிதையை மேற்காணும் பாதிப்போடு இணைக்க அனுமதி வேண்டுகிறேன். :)
Delete