Monday, August 27, 2012

கிறிஸ்துவுக்குள் விதைக்கப்பட்டவர்கள்...(Bro. Immanuel Sunder)

கடந்த சனிகிழமை இரவு 8 மணி... அதிக களைப்போடும்பசியோடும் ஒரு ஹோட்டலுக்கு சென்று அமர்ந்து என் அலைபேசியை எடுத்து பார்த்த போது ஒரு மிஸ்டு-கால் என்று பளிச்சிட்டது.. யார் என்று கவனித்தால் அண்ணன்.ஜெயகுமார். அவர்களை அழைத்து பேசிய போதுநான் கேள்விப்பட்ட செய்தி அதிர்ச்சியென உள்ளத்தை தாக்கியது. ஹோட்டலிலேயே கண்ணீர் வர ஆரம்பித்தது.. தளர்ந்த குரலில் அவர் சொன்னது "ஷக்தி... அண்ணன் இம்மானுவேல் சுந்தர் இறந்துவிட்டார்கள்" இதை என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.. “ஏன் ஆண்டவரே? என்று  உள்ளம் திடுக்கிட்டு கேட்க ஆரம்பித்தது. ஒருவேளை நீங்கள் என்னை கிறிஸ்தவ விசுவாசத்தில் இன்னும் சரியாக வளராதவன் என்று நினைத்துக் கொள்ளலாம். இருந்தாலும் பரவா-இல்லை.. மீண்டும் மீண்டும் அதே கேள்வி தான் என் உள்ளதை நெருடிக் கொண்டிருந்தது
"ஏன் ஆண்டவரே!" 

இத்தனை ஆதங்கத்தோடு நான் எழுதுவதை வைத்துஅவருக்கும் எனக்கும் நெருங்கிய பழக்கம் உண்டு என்று எண்ணிவிட வேண்டாம்நான் அவரை ஒரு முறையே பார்த்து இருக்கிறேன் (ஜுன் 17,2012) அவரிடம் நான் பேசியது ஒரே ஒரு வார்த்தை , அது "வாழ்த்துக்கள்" அவர் என்னிடம் பேசியது ஓரிரு வரிகள். அவ்வளவே எங்கள் பந்தம். ஆயினும் கிறிஸ்துவின் சிந்தை அவருக்குள் பிரகாசித்ததை அந்த சில நிமிடங்களில் என்னால் உணர முடிந்தது.. இதை எழுதும் போதும் மிக-சிறந்த ஒரு கிறிஸ்தவ எழுத்தாளரை தமிழ் உலகம் இழந்துவிட்டதை.. பல தமிழர்கள் இன்னும் அறியாமல் இருக்கிறார்களே என்று வேதனை பெருமூச்சு எனக்குள் பொங்குகிறது.. திரும்பி பார்கிறேன்....
 அன்று... Sunday 17,2012 ஜெயகுமார்  அண்ணனிடமிருந்து ஒரு அழைப்பு, "ஷக்தி.. நீ கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டிய ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. இம்மானுவேல் அண்ணனை நீ நிச்சயம் சந்திக்க வேண்டும்" இம்மானுவேல் சுந்தர்இவரை இதற்கு முன் நான் அறிந்து இல்லை.. அன்று சபைக்கு சென்று வந்த 80 கி.மீ பிரயாண களைப்புஎன் சரீரம் சம்திக்காவிட்டாலும்கண்டிப்பாக போய் வா என்று ஆவியானவர் என்னோடு போராடுவதை உணர்ந்தேன்.. வேப்பேரிநான் இருக்கும் துரைப்பாக்கத்தில் இருந்து அதிக தொலைவில் உள்ள இடம். வழி தெரியாது.. இருந்தாலும் போராட்ட்டதோடு தான் கிளம்பினேன்... அந்த எழுத்தாளர் நல்ல கோட்-சூட் அணிந்துவெள்ளை கார துறை போல இருப்பார் என்று கற்பனை செய்து கொண்டே உள்ளே நுழைத்து மேடையை பார்த்தால்... அங்கோ தென்னக மனம் வீசும் முகச்-சாயல்.. மிக எளிய உடையில்..நானா இன்றைய கதாநாயன்?” என்று அறியாதவர் போல அடக்கத்தோடு அமர்ந்து இருந்தார்.. சில நிமிடங்களில் அவரை பேச அழைத்தார்கள்... 

"
நம்மை அழைத்து , உருவாக்கிய தேவனுக்கு மகிமை..நான் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து , வளர்ந்தேன்... 

என் தாயாரே எனக்கு கதையை குறித்த ஆவலை உண்டு பண்ணினவர்கள்.. அவர்கள் சொல்லும் கதை எளிமையாகஅதே நேரத்தில் சொல்ல வரும் கருத்தை கேட்போர் இதயத்தில் பசுமரத்தாணி போல பதியச்  செய்பவை.. சினிமாவில் சேர்ந்தால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்று பதினொன்றாம் வயதில் கேள்விப்பட்டேன்.. ஒரு கட்டத்தில் சினிமாவில் சேர்ந்து முழு நேர கதா-ஆசிரியன் ஆக வேண்டுமென்று பேராசைபட்டேன்.
பள்ளி எனக்கு கிறிஸ்தவத்தை ஓரளவு  அறிமுகபடுத்தியது... ஆனால் என் கல்லூரியில் தான் கிறிஸ்துவை தனிப்பட்ட முறையில் அறிந்து கொண்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டேன்..
பின்னர் அவருக்கென்று ஊழியம் செய்ய ஒப்புக் கொடுத்தேன் .. 

FMPB 
யோடு இணைந்து பல வருடங்கள் பணியாற்றினேன்.. அறைகூவல் பத்திரிகையில் பதிப்பாசிரியாராக பணிபுரிந்தேன்.. பின்னர் வானமுதம் பத்திரிக்கை ஆரம்பிக்கபட்டபோது.. அதில் ஒரு சிறு-கதை அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று சகோ.கிங்ஸ்லி கேட்டுக் கொண்டதால்.. எழுத சம்மதித்தேன். என் சிறு-கதை வேட்ககையை தீர்த்துக் கொள்ளம் வகையில் இந்த வாய்ப்பு அமைந்தது.. சிறு-கதை எழுத்தாளனுக்கு வரும் முக்கிய பிரச்சனை கருத்து-வறட்சி. அது ஒருபோதும் எனக்கு ஏற்ப்பட்டது இல்லை. அதற்க்கு காரணம் என்னுடன் இருக்கும் என் சகோதரர்களே.. அநேக கருத்துக்களை பகிர்ந்து என் கதைகளுக்கு வலுவூட்டினர்.. 
...............

தேவ கிருபை நம்மை தாங்குவதாக" என்று சொல்லி விடை கொடுத்தார்.. அந்த புத்தகத்தை வாங்கிச் சென்ற நான்ஒவ்வொரு கதையின் இறுதியிலும் தூக்கி எறியப்பட்டவனாக உணர்வேன்.. "சோத்து பட்டாளம்" என்னும் சிறுகதையை ஒரு ரயில் பயணத்தில் வாசித்துக் கொண்டிருந்தேன்... அதில் வரும் ஜான் தன் சொந்த ஊரில் கிறிஸ்தவர்கள் செய்யும் அட்டகாசங்களை பொறுக்க முடியாமல் கண்ணீரோடு ஊரை விட்டு செல்லும் வரிகளை படிக்கும் போது என்னை அறியாமல் நானும் கண்ணீரில் மூழ்கி இருந்தேன்.. இத்தகு சிறந்த எழுத்தாளரையும்பண்பாளரையும் இழந்தது ஈடு செய்ய முடியாதது என்று என் உள்ளத்தில் அவ்வப்போது தோன்றினாலும்.. தேவன் நம்மோடு இருக்கிறார்... அவர் நம்மை தேற்றுகிறார் என்று ஆவியானவரின் குரல் தொனிக்கிறது.. அவரது கதைகளில் கிறிஸ்துவின் மீது அவர் கொண்டிருக்கும் அன்பும்கிறிஸ்தவம் மலிந்து போய் கொண்டிருக்கிறதே என்ற அவரது வேதனையையும் புரிந்து கொள்ள முடியும்.
சகோதரரின் மனைவி சகோதரி.எஸ்தர்மற்றும் பிள்ளைகள் ஐடாஐரின் க்காக ஜெபியுங்கள்.. 
கிறிஸ்துக்குள் விதைக்கபட்டிருக்கும் அண்ணனை கவுரவப்படுத்தவே இந்த மடலை எழுதுகிறேன்.
கிறிஸ்துவின் அன்பு நம்மை எப்போதும் இணைக்கட்டும்..
ஏசாயா 51:11 அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன்பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

No comments:

Post a Comment