Saturday, September 22, 2012

கண் திறந்த பெண்...


அன்றொரு நாள்  காலை 6 மணிக்கே டியூட்டி டைம் தொடங்குவதால் காலமே எழுந்து வேகமாக வாகனத்தை செலுத்தி அலுவலகத்திற்குள் நுழைந்து கை கடிகாரத்தை பார்த்தபோது... சின்ன முள்ளும் பெரிய முள்ளும் முறைத்துக் கொண்டு எதிரெதிர்  திசையில் திரும்பி இருந்தது.... 



அப்பாடா..! நேரத்திற்கு வந்துவிட்டோம் என்று பெருமூச்சு விட்டு... வேலைகளை செய்ய தொடங்கினேன்... 

சற்று நேரம் சென்ற பிறகு பசி வயிற்றிலிருந்து ஓலமிட்டுக் கொண்டே இருக்க... சாப்பிடலாம் என்று வெளியில் வந்தால்... வாசலில் ஒரு செக்குயூரிட்டி பெண்மணி கையில் ஏதோ ஒன்றை வைத்து உற்று படித்துக் கொண்டிருப்பது என் கண்களில் பட்டது ... 

இரவு முழுவதும் விழித்து இருந்ததால் கண்கள் பூத்துப் போய் இருந்தது.... ஏன் இவ்வளவு சிரமப்பட்டு இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே அப்பெண்ணை நெருங்கிய போது தான் புரிந்தது
அது பரிசுத்த வேதாகமம் என்று...

நான் அருகில் வருவதை கவனித்த அவளும்... எப்போதும் போல எனக்கு சலாம் போட எழுந்து நிற்க..இவ்வளோ சிரமப்பட்டு இந்த வீதியில் வைத்து ஏன் இதை வாசிக்கிறீர்கள் என்றேன்....

தினமும் காலை 7:30 க்கு வேதம் வாசிப்பது எனது வழக்கம்... எனது டியூட்டி காலை 5 மணிக்கே முடிந்துவிடும்... வீடு சென்று வாசிப்பேன்... ஆனால் இன்று அடுத்த டியூட்டி செய்பவர் லேட்டா வருவதா போன் செய்தார்... அதான் இங்கேயே வாசிக்கிறேன் என்று சொல்லி தன் துப்பாட்டவில் வேதத்தை மறைத்துக் கொண்டாள்...

"பயப்படாதீங்க.... நல்ல விஷயம் தான பண்றீங்க.. தொடர்ந்து படிங்க .." னு சொல்லி கடந்து போனேன்..

அப்போது என் மனதில் எண்ண அலைகள் புயல் போல வீச ஆரம்பித்தன... திடீரென்று சீக்கிரம் வேலைக்கு வர சொன்னதால்... இன்று காலை நான் வேதம் வாசிக்க மறந்திருந்தேன்....

நேரத்திற்கு வேலைக்கு வந்துவிட்டோம் என்ற திருப்பதி.. தேவனுக்கு நாம் நேரம் கொடுக்கவில்லை என்பதை மறக்க செய்திருந்தது...

வெட்கம்...! என் சிந்தையை நிறைத்திருந்த போது... என் கைபைக்குள் வேதம் இருப்பதும்.. இடைவெளி நேரம் இன்னும் 30 நிமிடங்கள் இருப்பதும் நினைவுக்கு வந்தது...

வந்த வழியே திரும்பி சென்று, வேதத்தை எடுத்து,
சங்கீதம் 119 இல் கண்களை பதித்தேன்...

"நீங்கள் வேதம் வாசித்தீர்களா?"


No comments:

Post a Comment